ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும் வவுனியாவில் ஒன்று கூடிய மக்கள் : நடந்தது என்ன?

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும் கலந்துரையாடல்

வவுனியா அறிவுசார் மன்றத்தின் ஏற்பாட்டில் “ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும்” எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (12.10.2019) மாலை இடம்பெற்றது.

வவுனியாவின் புத்திஜுவிகள் மற்றும் தொழில்சார் சமூகம் தேர்தலில் என்னவெல்லாம் செய்யவேண்டும் , தேர்தலின் தமிழ் மக்களின் பங்களிப்பு , யாருக்கு வாக்களிக்க வேண்டும் , வாக்களிப்பும் வவுனியா மாவட்டமும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அறிவிப்பாளரான விமலச்சந்திரன் அவர்களின் ஒருங்கினைப்பில் இடம்பெற்ற இவ் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவகுமார் , தமிழ் பத்திரிகையோன்றின் பிரதம ஆசிரியர் மதன் , தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜனகன் , பொறியலாளர் தயாபரன் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் மதுரகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் , தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தகர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like