வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது? வெளியானது அறிக்கை

வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது? வெளியானது அறிக்கை

நுண்நிதி கடன் தள்ளுபடி செய்வதற்காக நிதி அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு 2018 ஆம் அண்டு 85.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதுடன், குறித்த நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என்பதற்கான எந்த ஆவணமும் மாவட்ட செயலகத்தில் இல்லை என தெரியவருகிறது.

< வடக்கில் 56 இற்கு மேற்பட்ட குடும்பப் பெண்கள் நுண்நிதி நிறுவனங்களின் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் பெறப்பட்டு நிதி அமைச்சிற்கு 1414 மில்லியன் ரூபா நுண்நிதி கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்டு மாகாண ரீதியாக பிரித்து வழங்கப்பட்டிருந்தது. img src="https://www.newsvanni.com/wp-content/uploads/2019/10/money.jpg" alt="" width="849" height="459" class="alignnone size-full wp-image-103986" />

அந்தவகையில் வவுனியா மாவட்டத்திற்கு 85.5 மில்லியன் ரூபா நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ததற்கான எந்தவிதமான ஆவணங்களும் மாவட்ட செயலகத்தில் இல்லை என தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நுண்நிதி கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பயனாளிகளின் பெயர் விபரங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் பெயர் விபரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.

கடன்களை தள்ளுபடி செய்வதற்கான பயனாளிகள் எந்த அடிப்படையில் யாரால் தெரிவு செய்யப்பட்டனர் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக நுண்நிதி கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாக மாவட்ட செயலகம் பதிலளித்திருந்தது.

இது தொடர்பாக வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

நுண்நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனுக்கும் கூட்டுறவுச்சங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்பதுடன் அவ்வாறான எந்த நிதியும் நிதியமைச்சினால் எமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக நிதி நிறுவனங்கள் கடன் பெற்ற குடும்ப பெண்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதுடன் கடன் தள்ளுபடி செய்திருந்தால் அதன் விபரங்கள் ஏன் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட செயலகம் அறிவிக்கவில்லை என்பதுடன் அரசு வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கிய 85.5 மில்லியன் ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என பாதிக்கப்ட்ட பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You might also like