கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிரோ வந்த இருச்சக்கர வாகனத்தில் வந்த 3பேர் திடீரென்று அஞ்சலியின் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில், அவர் அணிந்திருந்த 24 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனார். வழக்கு பதிவு செய்த பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், சென்னையிலிருந்து வரும் நபர்களிடம் இதே பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

You might also like