கிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான நி லையில்

கிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான நி லையில்

கிளிநொச்சி – புன்னைநீராவி கிராமத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பொது வைத்தியசாலையின் வீதி மிகவும் மோ சமான நி லையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் அண்மைக்காலமாக நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த வீதியூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புன்னைநீராவிக் கிராமத்தில் 2900 குடும்பங்களின் வைத்திய நிலையமாக காணப்படும் குறித்த பொது வைத்தியசாலை வீதியின் சுமார் 500 மீற்றர் தூரம் வரையிலான பகுதி மிக மோ சமான நி லையில் காணப்படுகின்றது.

இதனால் அந்த வீதியை பயன்படுத்தும் நோயாளர்கள் பல்வேறு இ டர்களை சந்தித்து வருகின்றனர் என சமூக ஆர் வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

You might also like