வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வாக்குசாவடிகளில் வாக்காளர்களை அடையாளம் காண்பதற்காக ஒழுங்குவிதிகளை தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்னர் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமார் அடையாள அட்டை என்பவற்றை சமர்ப்பிக்கமுடியும்.

இதனை தவிர வேறு எந்த அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க முடியாது. எனினும் கிராமசேவகரிடம் இருந்து பெறப்படும் விசேட அடையாள அட்டை செல்லுபடியாகும்.

இந்த அடையாள அட்டையை மாவட்ட செயலாளர்களின் அனுமதியுடன் வழங்கமுடியும். இந்த விசேட அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை கிராமசேகவர்களிடம் இருந்து பெறமுடியும்.

அவற்றை நிரப்பி 2.5 சென்றிமீற்றர்- 3 சென்றிமீற்றர் அளவான இரண்டு கலர் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படங்களுடன் கிராமசேவகர்களிடம் நவம்பர் 9ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து நவம்பர் 4ம் திகதிக்கு முன்னர் அது கிடைக்காதவர்கள் இந்த விசேட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

You might also like