இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்த வவுனியா மேல் நீதிமன்றம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் மற்றுமொரு இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வவுனியா மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலையை குற்றவாளி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

You might also like