தாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!

தாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!

இரத்தினபுரி – கஹவத்தை – கொட்டகெத்தன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொ லை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு ம ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் வைத்து நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் கொ லை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு மற்றும் அவரது மனைவியான அசோக சந்தனி எனும் பட்டி என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபரான கு ற்றவாளியின் மனைவிக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கு ற்றவாளிக்கு எதிரான கு ற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 200 பக்கங்கள் உள்ளடங்கிய வழக்கின் தீர்ப்பின் ஊடாக கு ற்றவாளிக்கு ம ரண த ண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like