74 வயதிலும் விடா முயற்சி! தமிழ் மொழியில் சித்தியடைய போராடும் சிங்கள மூதாட்டி

இலங்கையில் அதிக வயதில் பரீட்சை எழுதிய பெண்மணி என்ற பெருமையை அத்தபத்து கல்யாணவத்தி எனும் மூதாட்டி பெற்றுள்ளார்.

74 வயதான நாணயக்கார ஹேவா அத்தபத்து கல்யாணவத்தி என்ற மூதாட்டி கடந்த வருடம், க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளார். இவர் மாத்தறை, நாதுகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் சாதாரண தரத்திலான இரண்டு பாடங்களுக்கு பரீட்சை எழுதியுள்ளார். எனினும் இரண்டு பாடங்களிலும் சித்தியடையவில்லை.

அதற்கமைய அவர் தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களை தெரிவு செய்து, மாத்தறை கொட்டுவேகொட இல்மா மத்திய மகா வித்தியாலயத்தில் தனியார் விண்ணப்பதாரியாக பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்..

எனினும் அவர் பரீட்சை எழுதிய இரண்டு பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரியவந்ததனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த முறை ஆயத்தம் இன்றி பரீட்சை எழுதியதாகவும், இம்முறை மேலதிக வகுப்புகளுக்கு சென்று பரீட்சையில் சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்கு ஆயத்தமாகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like