தென் இலங்கையில் இருந்து யாழிற்கு நடந்து வந்த முதியவரின் அவல நிலை

தென் இலங்கையில் இருந்து கால்நடையாக யாழ். வந்து எவருடைய உதவியும் இல்லாமல் வீதியில் தனியாக இருந்த முதியவர் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான பேதுரு அப்புச்சாமி திசாநாயக்க என்ற முதியவர் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பணத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர், மனநோயால் பாதிக்கப்பட்டு வீதியில் அலைந்து திரிந்த நிலையில், அவரை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சிகிச்சைகளும் நிறைவுற்ற நிலையில் அவர் மீண்டும் வீதிகளில் அலைந்து செல்லக் கூடாது என்பதற்காக, கைதடி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த முதியவரிடம் வைத்தியர்கள் விசாரித்த போது, தனக்கு இரு சகோதரர்கள் இருப்பதாகவும், தனக்கு திருமணமாகவில்லை எனவும், கால்நடையாகவே தான் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதியவர் தொடர்பில் உறவினர்கள் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு கைதடி அரச முதியோர் இல்லத்தினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like