தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய முக்கிய புள்ளி : புலனாய்வு பிரிவின் அடுத்த இலக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உதவிகளை வழங்கிய முக்கிய நபர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படுவார் என புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அல்லது மே மாதத்திற்குள் அவர் கைது செய்யப்படலாம் என புலனாய்வு திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கிய தவல்களுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முக்கிய புள்ளி என கருதப்படும் குறித்த நபர் விடுதலைப் புலிகள் காலத்தில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அண்மையில் வெல்லவாய பகுதியில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பிர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like