தனது காதலை நிரூபிக்க இந்த இளைஞர் செய்ததென்ன தெரியுமா?

தான் காதலித்து வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, தன்னுடைய காதல் புனிதமானது என்பதை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படித்து வந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஃபயஸ் மற்றும் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அங்கீதாவும் பார்த்த முதல் பார்வையில் காதலிக்கத் துவங்கி விட்டனர்.

ஆனால், இந்த காதலுக்கு அங்கீதாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அங்கீதாவின் பெற்றோர் அரியானாவில் உள்ள ஹிசாரில் வசித்து வருகின்றனர்.

அங்கீதாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ”அங்கீதாவை மதம் மாற வலியுறுத்த மாட்டேன். மாமிச உணவுகள் சாப்பிட வற்புறுத்த மாட்டேன். அவரது வாழ்க்கையை அவர் வாழலாம்” என்று அங்கீதாவின் பெற்றோரிடம் சொல்லிப் பார்த்துள்ளார் ஃபயஸ். ஆனால், அங்கீதாவின் பெற்றோரை சமாதனப்படுத்த முடியவில்லை.

இதற்குப் பின்னர் ஒருவரை பிரிந்து ஒருவர் இந்த உலகில் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்த காதலர்கள் இருவரும், முதலில் மகாலட்சுமி நகரில் உள்ள ராமர் கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.

இரண்டாவது நீதிமன்றத்தில் திருமணம் செய்துள்ளனர். மூன்றாவது முஸ்லிம் முறைப்படி கோவாவில் திருமணம் செய்துள்ளனர்.

நான்காவது முறையாக கோவா பீச்சில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

தங்களது காதலை நிரூபிக்க அங்கீதாவை ஃபயஸ் நான்கு முறை திருமணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் என்ன நடந்தாலும் இவர்களது திருமணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அங்கீதாவின் தந்தை சபதம் செய்து பங்ககேற்கவில்லையாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்கள் தம்பதிகளாக அனைத்து இந்து மற்றும் முஸ்லிம் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அங்கீதாவின் பெற்றோர், ”நாங்கள் பார்த்து இருந்தால் கூட இந்தளவிற்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்து இருக்க முடியாது. ஃபயஸ் எங்களது மகன் போன்றவர் என்று புகழ்ந்து பேசுகின்றனராம்.

You might also like