பெண்னை ஏமாற்றி பேஸ்புக்கில் பல இலட்சம் கொள்ளையடித்த மாணவர்!

சமூக வலைத்தளம் ஊடாக பெண்ணொருவரை ஏமாற்றி மோசடி செய்த மாணவர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை மேலதிக மாவட்ட நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவிற்கமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தங்க ஆபரணங்கள் உட்பட பெறுமதி பொருட்களை அனுப்பி வைப்பதாக வாக்குறுதியளித்து பேஸ்புக் ஊடாக பெண்களை ஏமாற்றி 6 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் கற்கும் மாணவன் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது 15000 ரூபாய் அபராதம் மற்றும் 3 .லட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய மேலும் பல நபர்களை கைது செய்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு ஊழல் மோசடி விசாரணை பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு நைஜீரிய நாட்டவர்கள் உட்பட மேலும் பலர் தொடர்புப்பட்டுள்ளதாக ஊழல் மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதனை தொடர்ந்து நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் கற்கும் அநுருத்த என்ற மாணவர் ஒருவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் கற்கும் மஹேல மற்றும் நவோத்ய என்ற அவருடைய இரண்டு நண்பர்கள் தொடர்புப்பட்டுள்ள நிலையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதவானினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டவரினால் பேஸ்புக் ஊடாக, முறைப்பாடு செய்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு தங்க ஆபரணங்கள் உட்பட பெறுமதி பரிசுகளை வழங்குவதாக தெரிவித்து, இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண் வழங்கும் பணத்தை வைப்பு செய்வதற்காக மற்றுமொறு நைஜீரிய நாட்டவரின் வழியில் மஹேல, நவோத்ய, அனுருத்த ஆகிய மாணவர்களின் வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வங்கி கணக்கிற்கமைய குறித்த பெண்ணினால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் தங்களின் கணக்குகளில் வைத்திருந்தமை தொடர்பில் மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You might also like