10 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

தனது மகனை கனமாக டயர் பகுதி ஒன்றினால் கொடூரமாக தொடர்ந்தும் தாக்கி வந்ததாக கூறப்படும் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கடவத்தை – தளுபிட்டிய பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 வயதான குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்ற நிலையில், தந்தையும் பிள்ளையும் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

எனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தந்தையும், மகனும் கடவத்தை பகுதிக்கு வந்துள்ளனர்.

கடவத்தைக்கு வந்ததில் இருந்து பிள்ளை பாடசாலைக்கு செல்லவில்லை எனவும், தந்தை தொடர்ந்தும் பிள்ளை தாக்கி வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் சிறுவன் சிகிச்சைகளுக்காக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தந்தையை மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக கடவத்தை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

You might also like