150அடி உயரமான கோபுரத்தில் ஏறி பொலிஸாரைத் திட்டிய பெண்!

தான் மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றை பொலிஸார் உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்து பெண்ணொருவர் 150அடி உயரமான கோபுரத்தில் ஏறிநின்று பொலிஸாரைத் திட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று தென் மாகாணத்தில், காலி, கொஸ்கொடைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணுக்கு சொந்தமான காணியில் திருட்டுத்தனமாக கறுவா வெட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் பொலிஸார் அது குறித்து அசிரத்தையாக செயற்பட்ட நிலையில் நேற்று, முறைப்பாட்டாளரான பெண் பொலிஸ் நிலையம் அருகே இருந்த 150 அடி உயரமான கோபுரம் ஒன்றில் ஏறி பொலிஸாருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து அவ்விடத்துக்கு வருகை தந்த தென்மாகாண சபை எதிர்க்கட்சி அரசியல்வாதியான தனவன்ச, பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்து, சம்பவத்தை சமரசமான முறையில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

You might also like