நாடு முழுவதும் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பினால் 1570 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1570 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இ ந்த நடவடிக்கைக்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள 10756 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நீதிமன்ற பிடியாணை பெற்றுள்ள 739 பேரும், குற்ற செயல்களுக்காக 112 பேரும், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 198 பேரும், மதுபானம் அருகில் வைத்திருந்தமை தொடர்பில் 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய 310 பேரும், சாரதி அனுமதி பத்திரமின்றி பயணித்த 169 பேரும், பாரிய போக்குவரத்து சட்டத்தை மீறியமை தொடர்பில் 96 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like