டெங்கின் தாக்கம் உக்கிரம்! பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

டெங்கு நோயின் தீவிர அபாயம் காரணமாக காத்தான்குடியில் நாளை தொடக்கம் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒருவார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியாவுக்கு அடுத்து தற்போது காத்தான்குடியில் கடுமையான முறையில் டெங்கு நோயின் அபாயம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 200க்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு சிறுவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் காத்தான்குடியில் டெங்குநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக நாளை தொடக்கம் கல்வி நிலையங்களுக்கு ஒருவார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவற்றில் 40 பாலர் பாடசாலைகள், 35 அரபிக் கல்லூரிகள் மற்றும் 15 தனியார் கல்வி நிலையங்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

You might also like