வவுனியா மாகாறம்பைக்குளத்தில் வீடுடைத்து பல லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (31.03.2017) வீடுடைத்து திருட்டுச்சம்பவமோன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியா மகாறம்பைக்குளம் கல்வியற்கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடோன்றின் வீட்டார்கள் திருமண நிகழ்விற்காக நேற்றையதினம் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் வீட்டின் கூறையினை உடைத்து வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் இருந்த ஒருலட்சத்தி அறுபதாயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரு தொலைபேசிகளை களவாடிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like