இலங்கையில் வாகனங்கள் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையினால் பெற்றோல் தாங்கிகள் வெடிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக உரிய நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதனால் பெற்றோல் தாங்கியின் அரைவாசியை மாத்திரம் பெற்றோலால் நிரப்புமாறும் ஏனைய பகுதியை வெற்றிடமாக விடுமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்திருக்கிறது.

எனினும் குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கும் பிரசாரத்தை அமைச்சர் சந்திம வீரக்கொடி முற்றாக நிராகரித்துள்ளார்.

பெற்றோல் தாங்கிகள் வெடித்துச் சிதறிய ஐந்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆனால், இதனை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சான்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இதனால் உரிய நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

You might also like