பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண் கைது
பிரபல பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி பெற்றோர்களிடம் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிக பணத்தை மோசடியாக பெற்று கொண்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் முதலாம் தரம் தொடக்கம் 6 ஆம் தரம் வரை 5 பிள்ளைகளை சேர்ப்பதாக கூறி ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிக பணத்தை இந்த பெண் மோசடியாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண் வெவ்வேறு வங்கிகள் ஊடாக இந்த பணத்தை பெற்று கொண்டுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த பெண் இதற்கு முன்னரும் பலரை ஏமாற்றி பணம் பெற்றுகொண்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.