புகை பிடிப்பவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய வவுனியா இளைஞர்கள்

இன்னும் சிகிரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்து வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இன்று (01.04.2017) விழிப்புணர்பு பேரணியேன்று இடம்பெற்றது.

வவுனியா சிந்தாமணி மணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 10.00மணிக்கு ஆரம்பமான இவ் விழிப்புணர்பு பேரணி வவுனியா நகரை வலம்வந்தது.

குறிப்பாக வவுனியா மத்திய பேரூந்து நிலையம், மத்திய சந்தை, பஜார் வீதி, குருமன்காடு, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்பு பேரணி சென்றது.

இப்பேரணியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம், சுவரோட்டிகளை ஒட்டினார்கள’

 

You might also like