கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 41வது நாளாக தொடர்கின்றது

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநாச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் கவன ஈர்ப்பு போராட்தத்திற்கு இன்று சம உரிமை இயக்கம் ஆதரவு வழங்கியிருந்தது.

இதே வேளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும்மக்களை இன்று இங்கிலாந்து திருச்சபையின் மத குருக்கள் சந்தித்திருந்தனர். இங்கிலாந்திலிருந்து வந்த அங்கிலிக்கன் மிசன் திருச்சபையின் குருக்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு இன்று மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்.

 

 

You might also like