மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி : சுற்றிவளைப்பில் யுவதிகள் கைது

பத்தரமுல்லையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை – பொல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, குறித்த நிலையத்தின் முகாமையாளராக செயற்பட்ட நபரொருவரும் 4 யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெலும்மஹர, தனமல்வில, வென்னப்புவ மற்றும் ருவான்வெல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like