பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களின் விருந்து : 30 பேருக்கு நேர்ந்த கதி!!

30 பேருக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான நண்பர்களின் போ தைப்பொ ருள் விருந்து ஒன்றை பொலிஸார் மு ற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, 9 யுவதிகள் உட்பட 30 பேரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐஸ், ஹே ஸ், க ஞ்சா ஆகிய போ தைப்பொ ருட்கள் சி கரெட் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை, அநுராதபுரம், இரத்தினபுரி, காலி, கொழும்பின் புற நகர் பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக்கில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நுழைவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கொடகம பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு நேற்றிரவு வந்து, இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். மண்டபத்தில் அதிகமான சத்தம் கேட்பதாக மீகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமகே நிலந்தவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, பு லனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி அதனை உறுதிப்படுத்திய பின் பொலிஸார் இந்த மு ற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்த பெயர் பட்டியலை ப ரிசோதித்த போது அதில் 75 பேர் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

You might also like