வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதிய தலைவராக வீ.ஜெகசோதிநாதன் தெரிவு

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதிய தலைவராக வீரவாகு ஜெகசோதிநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் பொதுச்சபை கூட்டம் இன்று வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச்சபை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் முன்னாள் கிராம சேவகரான வீரவாகு ஜெகசோதிநாதன் 61 வாக்குகளை பெற்று தலைவராகவும், நாகமுத்து நாகேந்திரன் 51 வாக்குகளை பெற்று உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை த. சிவராஜா 49 வாக்குகளையும், பொ.மங்களநாதன் 46 வாக்குகளையும் மாரிமுத்து சிவகுமார் 45 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், 35 வயதுக்குட்பட்டோருக்கான நிர்வாக அங்கத்துவத்தில் தேநாயகம் தயாநந்தன் 52 வாக்குகளையும், பாலகிருஸ்ணன் பாலேந்திரன் 47 வாக்குகளையும் பெற்று புதிய நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நிர்வாக காலத்தில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பல கிளைகள் மூடப்பட்டு வந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கிய நிலையிலேயே புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like