வவுனியா வடக்கு பிரதேச நிர்வாகம் பெரும்பான்மையினர் வசம்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகம், புதிய எல்லை நிர்ணயம் மூலம் பெரும்பான்மையினரின் எல்லைகளுக்கு செல்வது தொடர்பில் தமிழ்த் தலைமைகள் மௌனம் காப்பது ஏனென வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபக தலைவர் கே.தேவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

1983 கறுப்பு ஜுலையையடுத்து உருவான போர் நிலைமையினால் முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் அங்கு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்விக நிலங்கள் என்பதை இல்லாமல் செய்யும் நோக்குடன் அதனை பிரிக்கும் நடவடிக்கையாகவே இந்த குடியேற்றங்கள் அமைந்தன.

இந்த குடியேற்றத்தால் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லையில் வெலிஓயா பிரதேச செயலகம் இரகசியமான முறையில் இயங்கி வந்தது. தற்போது அதனை உத்தியோகபூர்வமாக்க நடவடிக்கைகள் எ’டுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வவுனியா வடக்கு பகுதியிலுள்ள தமிழ் கிராமங்களில் பெரும்பான்மை வாக்காளர்களின் பெயர்கள் பதியப்பட்டிருப்பதுடன், புதிய எல்லை நிர்ணயம் மூலம் சில கிராமங்கள் வெலி ஓயாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகம் பெரும்பான்மையினரின் கைகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

You might also like