வர்த்தகரின் கொடூரமான செயற்பாடு! தாய், குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இரண்டு வயது மகளை தரையில் அடித்து காயப்படுத்திய வர்த்தகர் இன்று கொச்சிகடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கொச்சிகடை – ஜனபதகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் பெண் மற்றும் குழந்தை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு பெற்றுக் கொண்டு இந்த பெண் உட்பட குடும்ப உறுப்பினர்கள் தங்கியுள்ளனர்.

பெண் மற்றும் காயமடைந்த குழந்தை தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like