இலங்கையின் ரகசியங்களை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்திய பெண்

வெளிவிவகார அமைச்சின் அரசாங்க இரகசிய தகவல்களை பெண்ணொருவர் வழங்கி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புப்பட்ட அதிகாரி ஒருவரின் மனைவி ஊடாக சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளிடம் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரியின் மனைவி அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல்களை இதற்கு முன்னர் வழங்கிய சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி சிக்கியிருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் தூதுவர்களான தயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குகநாயகம் ஆகியோருக்கு எதிரான தகவல்கள் குறித்த அதிகாரியின் ஊடாகவே மேற்குலக நாடுகளுக்கு வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like