53 பேரை பலியெடுத்த டெங்கு : 26 ஆயிரம் பேர் பாதிப்பு

கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக நாடு முழுவதிலும் 53 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில். டெங்கு காய்ச்சல் காரணமாக களுத்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞர், உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 26,000 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் 5838 பேரும், கம்பஹாவில் 2965 பேரும், திருகோணமலையில் 1745 பேரும், யாழ்ப்பாணத்தில் 1525 பேரும் காலியில் 1507 பேரும் களுத்துறையில் 1386 பேரும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில். கடந்த 29ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like