சோதனையிலும் சாதனை படைத்த மாணவி! வைத்தியராவதே இலக்கு

கால் இரண்டும் விழுப்புண் அடைந்த போதிலும், மாணவி ஒருவர் பரீட்சையில் அதிசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

காலி சவுத்லென்ட்ஸ் மகளீர் வித்தியாளயத்தில் கல்வி கற்கும் ராதா ஆரியரத்ன என்ற மாணவி இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகி இருந்தன. அதில் குறித்த மாணவி ஆங்கில பிரிவில் 8 ஏ மற்றும் ஒரு பீ சித்தி பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தினால் அவர் தற்போது வரையில் இரண்டு கால்களும் ஒழுங்கான முறையில் இயங்காத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலும் குறித்த மாணவி அதிசித்தி பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவி தெரிவிக்கையில்,

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்தினால் நடக்க முடியாத நிலையிலேயே உள்ளேன். அன்று முதல் என்னால் பாடசாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தவணை பரீட்சைகளை வீட்டில் இருந்து செய்வதற்கு பாடசாலை நிர்வாகம் உதவியது. நான் ஒரு போதும் பின் வாங்கவில்லை. பல மாதங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவினார்கள். அதற்கமைய எனது முயற்சியுடன் பரீட்சை சித்தியடைந்தேன்.. என குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் விசேட வைத்தியராக பணியாற்றும் விருப்பத்தில் உள்ளதாக குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

You might also like