காதலியை கொடூரமாக அடித்து கொன்ற காதலன்: வெளியான பகீர் காரணம்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன், காதலியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜெனிபர்புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவரும் செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வந்த ஜான்மேத்தீசும் (22) பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெனிபர் காதலை முறித்துக் கொள்வோம் என்று ஜான்மேத்தீசிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் என்பதால் மாமல்லபுரத்தில் இரு வரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் கூறியுள்ளார்.

மேலும் பரிசு ஒன்று கொடுக்கிறேன். அதை மட்டும் வாங்கி கொள் என்றும் மேத்தீஷ் கூறியுள்ளார். இதனையடுத்து ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது பரிசு பொருள் இருப்பதாக கூறி அட்டை பெட்டியை மேத்தீஷ் காட்டியுள்ளார்.

அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை பெட்டியை திறந்துள்ளார்.

அதில் இருந்த சுத்தியல் ஒன்றை எடுத்த மேத்தீஷ் திடீரென ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் நிலைக்குலைந்தார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார்.

பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு மேத்தீஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைடையே வெகுநேரம் கடந்தும் இருவரையும் காணாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாமல்லபுரம் சென்ற குடும்பத்தினர்,.புலிக்குகை அருகில் மேத்தீஷ் மோட்டார் சைக்கிள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன் அருகே 2 பேரும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. தற்போது மாமல்லபுரம் பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like