வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு

வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை  9.30மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்தினாவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80மல்லியன் ரூபா நிதியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வங்கல் சேவை நிலையத்தையும் மாமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு நிலையமும் இன்று மத்திய சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜிணோட் குரே, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக, தமிழ் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைப்பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like