சமுகவலைத்தளங்களின் செயற்பாடு : அரசாங்கம் எடுத்துள்ள ந டவடிக்கை!

சமுகவலைத்தளங்களின் செயற்பாடு

சமூக வலைத்தளங்கள் பலம் படைத்தவை என்றபோதிலும் அவற்றின் தரம் உயர்த்தப்படவில்லை. எனவே அவற்றின் தரத்தை உயர்த்தி ஊடக த ர்மத்தை முறையாக நெறிப்படுத்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகப் பிரிவொன்று வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படுமென தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சராக நேற்றையதினம் (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தில் அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அரச ஊடக நிறுவனங்களின் தரத்தையும் பிரபல்யத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்படுவார்கள். ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டிய கடமை ஊடக நிறுவனங்களுக்கு உள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாம் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார். அது எமக்கு எடுத்துக்காட்டாகும். மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை பிரகடனத்தில் ஊடகம் தொடர்பாக உள்ள அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் உண்டு. அபிவிருத்தியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை தொடர்பாக பொது மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சிற்கு உட்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like