கோட்டாபய வெளியிட்ட உற்சாகமான செய்தி! கு ழம்பிப்போன மனோ

கோட்டாபய வெளியிட்ட உற்சாகமான செய்தி

இலங்கையை சிங்கப்பூரை, கனடாவை போன்று பல்லின தேசமாக மாற்றுவோம் என ஜனாதிபதி கூறியதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

எனினும் குறித்த செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“நாம் இலங்கையில் ஒரு பல்லின தேசமாக மாறுவோம். இது சி ங்கள தேசமல்ல, தமிழ் தே சமல்ல என நாம் சிங்கப்பூரை, கனடாவை போன்று இன்னோர் உதாரணத்தை உருவாக்குவோம். அனைவருக்கும் அவரவர் இருப்பு, (சம) மொழி, கலாச்சாரம், மதம் இருக்கும்” என ஜனாதிபதி கூறியதாகசெய்தி வெளியாகி உள்ளது.

“இச்செய்தி சமூக ஊடகத்தில் பகிரப்படுகிறது. இலங்கை அடையாளத்தை தேடி, பன்மையை கொண்டாடும், இதோர் உற்சாக செய்தி. ஆனால், இந்த செய்தி எங்கிருந்து கிடைத்தது? ஜனாதிபதி எங்கே இந்த செய்தியை சொன்னார்? பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் எவரும் உதவினால் நலம்.” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசனின் இந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் Lee Kuan Yew 1965ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

இதற்கான ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கூறியதை சிலர் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like