வாகன தாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட பிரதமர் மஹிந்த
வாகன தாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
கடந்த அரசாங்கத்தில் அமுலிலிருந்த எ ரிபொருள் வி லைச் சூ த்திரம் தொடர்ந்து அமுலில் இருக்காதென பிரதமர் மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் செய்தது போன்று ஒவ்வொரு ரூபாயாக எ ரிபொருள் விலையை அதிகரிக்க எந்தவொரு எதிர்பார்ப்பும் எமக்கில்லை. மக்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் எரிபொருள் விலையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் இராஜாங்க அமைச்சராக வாசுதேவ நாணயக்கார நேற்று அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.