கோட்டபாயவிற்கு இன்ப அ திர்ச்சியை கொடுத்த மோடி

கோட்டபாயவிற்கு இன்ப அ திர்ச்சி

நேற்று இந்திய பிரதமர் மோதி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரியில் நான் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையே பிரதமர் மோதி அவர்கள் அன்பு நினைவாக எனக்கு வழங்கினார்.

அப்போது அந்த பயிற்சிநேறியில் என்னுடன் இணைந்திருந்த தற்போதைய இந்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வி. கே .சிங் அவர்களும் இருந்தார்.

தற்போதைய நைஜீரிய ஜனாதிபதி அவர்களும் இந்த புகைப்படத்தில் இருப்பது இன்னொரு சிறப்பம்சம்.“உங்களிடம் இல்லாத ஒர் அரிய புகைப்படம் இது…” என்று கூறியபடி இந்த புகைப்படத்தை பிரதமர் வழங்கியபோது, நான் மெ ய்சிலிர்த்து வியந்தேன்.

You might also like