நாளை முதல் வாகனம் வாங்க உள்ளவர்களுக்கு வரிக் குறைப்பினால் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?

நாளை முதல் வாகனம் வாங்க உள்ளவர்களுக்கு

இடைக்கால அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் நாளை முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வாகன விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென இலங்கை வாகன இறக்குமதியானர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வானங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரி காரணமாக அதிகரித்த வாகனங்களின் விலை அதே நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக வாகனங்களை கொள்வனவு செய்யும் போது குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுள்ளார்.

You might also like