உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி?

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நாளை ( 03 )கூடவுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்குதல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டு இறைவரி சட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கை வெகுவிரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

You might also like