பு கைப்பி டிக்காதவர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதி : பு கைச்சலில் பு கைதாரிகள்!

பு கைப்பி டிக்காதவர்களுக்கு வழங்கப்படவுள்ள வசதி

பு கைபிடிக்காத ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளநிலையில் நிறுவனத்தின் அந்த செயற்பாடு பு கைப்பி டிப்பவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரும் அடுக்குமாடி கட்டடத்தின் 26வது மாடியில் உள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தினமும் ஒவ்வொரு முறை பு கைபிடிக்கவும் கீழே இறங்கி சென்று வர 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறதாம்.

அவர்கள் இப்படி சென்று வரும் நேரத்தில் புகைப்பிடிக்காத ஊழியர்கள் எங்கும் செல்லாமல் தங்கள் வேலைகளை கவனித்து வருகிறார்களாம். இதை கருத்தில் கொண்ட அந்த நிறுவனம் புகை பி டிக்கும் ப ழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடாந்த விடுமுறையில் மேலும் 6 நாட்களை கூடுதலாக வழங்கியுள்ளார்கள். இந்த அறிவிப்பு பு கைப்பிடிப்பவர்களுக்கு சற்றே பு கைச்சலை கிளப்பியுள்ளதாம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் இதுபோல பு கைபிடிக்காதவர்களுக்கு சில சலுகைகள் தருவதன் மூலம் மற்றவர்களும் தங்கள் பு கைப்பழக்கத்தை விட்டுவிட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

You might also like