ஜனாதிபதியைக் கொ லை செய்ய ச தியா? கை தான 5 இளைஞர்களில் வாழைச்சேனை நபர் த டுப்பில்!

ஜனாதிபதியைக் கொ லை செய்ய ச தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கொ லைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொ கையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூ ழலும் கிடைக்கும் எனவும் கூறி சிலருடன் இணைந்து கொ லை செ ய்ய ச தித் திட்டம் தீ ட்டினார்கள் என்ற ஐந்து இளைஞர்களைக் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம், பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டவரை மட்டும் 72 மணி நேரம் த டுப்பில் வைத்து வி சாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு நேற்று அனுமதியளித்தது.

மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று (04) மாலை வழங்கினார். அதன்படி வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த மொஹம்மத் ரிப்கான் எனும் சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

You might also like