வவுனியாவில் மக்களின் பாதுகாப்புக்காக குப்பை பொறுக்கிய கிராம அலுவலகர்கள்..!! குவியும் பாராட்டுகள்

வவுனியாவில் டெங்கினை கட்டுப்படுத்த வீதியில் இறங்கிய கிராம சேவையாளர்கள்

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகம் டெங்கு ஒழிப்பு செயற்றிடத்தினை இன்று (05.12.2019) மதியம் 2.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை முன்னேடுத்திருந்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலிருந்து வவுனியா நகர் வரையிலான வீதியின் (A-9) இரு கரையிலும் காணப்படும் பொலித்தீன் , பிளாஸ்டிக் பொருட்கள் , போத்தல்கள் போன்றவற்றையினை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிராம சேவையாளர்கள் வீதியில் இறங்கி அசுத்தமென பாராது சேறு , பற்றைகள் போன்றவற்றிலும் இறங்கி அங்குள்ள குப்பைகளை அகற்றியிருந்தமை வீதியில் சென்ற பொதுமக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றிருந்தது.

You might also like