இனி இவற்றிற்கு அனுமதி பத்திரம் தேவையில்லை! அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்!

இனி இவற்றிற்கு அனுமதி பத்திரம் தேவையில்லை!

மணல் மற்றும் கற்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறும் திட்டம் உடன் அமுலாகும் வகையில் நேற்று (04) அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களே இவ்வாறு இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின்இரண்டாவது அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

You might also like