யாழில் சூரிய கிரகணத்தை அவதானிக்க விசேட ஏற்பாடுகள்

யாழில் சூரிய கிரகணத்தை அவதானிக்க விசேட ஏற்பாடுகள்

இலங்கையின் வடபகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 26ம் திகதி அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு என்பன இணைந்து முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like