முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள (ஏ 35) பாலமொன்று உடைந்துள்ளதால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வள்ளிபுனம், காளி கோவிலடி பகுதியிலுள்ள பாலமே இவ்வாறு உடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதிப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீதியில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like