கிளிநொச்சியில் வெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம் – மாணவர்கள் பாதிப்பு!

கிளிநொச்சியில் வெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம் – மாணவர்கள் பாதிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

You might also like