புதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்

புதுக்குடியிருப்பில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை புனரமைக்கும் பணி ஆரம்பம்

கனமழையினால் புதுக்குடியிருப்பு – பரந்தன் A – 35 பிரதான வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடியில் பாலம் சேதமடைந்திருந்தது.

சுதந்திரபுரம் சந்தி – வள்ளிபுனத்துக்கு நடுவில் வீதி வளைவோடு ஒட்டியிருக்கும் பாலமே இவ்வாறு உடைந்துள்ளது.

இதன் காரணமாக உடைந்த பாலத்தினூடாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீதிப் போக்குவரத்துத் தடைப்பட்டுடிருந்தது.

அத்துடன் பரந்தன்- புதுக்குடியிருப்பு இடையிலான போக்குவரத்தும் இதன் காரணமாக தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக உடைந்த பாலத்தை கட்டும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like