மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள உத்தரவு

மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள உத்தரவு

சமகால அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரி நிவாரணம், பொது மக்களுக்கு உரிய முறையில் கிடைக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பபினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கும் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி செயற்பட வேண்டிய முறை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறறுள்ளது. கூட்டத்தின் பின்னர் கலந்து கொண்டவர்களுகளுக்கு விசேட இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like