ஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்!

ஓவியங்களால் பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்!

நாடு பூராகவும் பல மாவட்டங்களில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் கிளிநொச்சி சுயாதீன இளைஞர்களால் வர்ணமயமாகும் கிளிநொச்சி எனும் தொனிப் பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வர்ணம் பூசும் பணி அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், அமைப்புக்கள், தனிநபர்கள் எனப் பலரின் ஆதரவோடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள் தமக்கு கிடைக்கின்ற நேரங்களைப் பயன்படுத்தி பேருந்து தரிப்பிடங்கள், மதில்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்து ஓவியங்களால் அழகாக்கி வருகின்றனர்.

குறித்த ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும், ஆதரவினைவும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து சுயாதீன இளைஞர் குழுவிடம் வினவிய போது,

எமக்கு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி இவ்வேலைத்திட்டத்தை செய்து வருகின்றோம். பலர் உதவிகளை செய்து வருகின்றார்கள்.

முதற்கட்டமாக நகர்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களும் சில வீதிக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் மதில்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுக்கான அனுமதிகளையும் சட்டரீதியாக எடுத்துள்ளோம். அவற்றை முடித்த பின்னர் அடுத்த பகுதிகளை நோக்கி நகரவுள்ளோம்.

எமது திட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்பும், எமது வர்த்தகர்கள் அமைப்புக்கள், தனிநபர்கள் என பலரும் உதவுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

You might also like