வவுனியாவில் மாணவி மீது மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் : மாணவன் கைது

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும்  17 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 31.03.2017 அன்று இரவு பாடசாலை நிகழ்வு ஒன்று மாமடுவ பகுதியில் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது இதையடுத்து அந்தப்பகுதிக்குச் சென்ற  அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் குறித்த மாணவியுடன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் மாணவியுடன் நீண்ட நாட்களாக நட்பு ரீதியில் பழகிவந்துள்ளார் என விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாடசாலை மாணவன்  18வயது என்ற மாணவனைக் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்டவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

You might also like