வவுனியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றதா? வீதியில் திரண்ட மக்கள்

வவுனியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றதா? வீதியில் திரண்ட மக்கள்

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று (09.01.2020) இரவு சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.

ஈரானின் இராணுவத் தளபதியை அமெரிக்கா ஏ வுகணைத் தா க்குதலில் கொ லை செய்த நிலையில் வளைகுடா நாடுகளில் போ ர்ச் சூ ழல் காணப்படுவதால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது. எனினும் பெரியளவில் விலை ஏற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அ ச்சத்தில் வவுனியாவிலுள்ள சில எரிபொருள் மீள்நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் நிரப்புவதைக் காண முடிகிறது.

You might also like