இந்த ஆண்டுக்குள் வரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்.. பயனாளர்களுக்கு பயனளிக்குமா?

இந்த ஆண்டுக்குள் வரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்.. பயனாளர்களுக்கு பயனளிக்குமா?

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு வகையான அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டுவருகிறது.

அதன்படி, டார்க் மோட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட சில புதிய வசதிகள் வரவுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது சம்பந்தமாக, நெதர்லாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சந்தைப்படுத்துதல் தொடர்பான உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது. அதன்படி பயனாளர்கள் பார்க்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களின் நடுவே விளம்பரம் தோன்றும்படி வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும், விளம்பரம் தரும் நபர்களின் பொருள் அல்லது நிறுவனம் தொடர்பான தகவல்களே பொதுப்பயனாளர்களுக்கு தெரியும் என்றும், தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

You might also like